Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சைக்கிளில் சென்ற மாணவரை மடக்கிய காவல்துறை

செப்டம்பர் 17, 2019 05:42

சென்னை: சைக்கிளில் சென்ற பள்ளி மாணவரிடம் போலீஸ் எஸ்.ஐ., ஹெல்மெட் கேட்டு பிடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து, விதிகளை நெறிப்படுத்துவதில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரியூர் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சிறப்பு போலீஸ் எஸ்.ஐ., சுப்பிரமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி மாணவர் ஒருவர், அந்த சாலை வழியாக, சைக்கிளில் சென்றார். அப்போது, அந்த மாணவரை அழைத்து சென்று நிறுத்திய சுப்பரிமணி, அந்த சைக்கிளை பூட்டு போட்டார். 

எதற்காக போலீசார் நிறுத்தினர் என தெரியாமல், அந்த மாணவர் , திகைத்தபடியே அங்கு நின்று கொண்டிருந்தார். ஹெல்மெட் போடவில்லை என்பதால், போலீசார் அபராதம் செலுத்த கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர், அந்த மாணவரையும், சைக்கிளையும் விடுவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தலைப்புச்செய்திகள்