Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் காசு: புதிய கேஸ்பேக் திட்டம்

செப்டம்பர் 17, 2019 06:47

நீலகிரி:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைக்காக ஏடிஎம் மூலம் தண்ணீர் கிடைக்க வசதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் "கேஸ்பேக்" என்னும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சிக்காக இயந்திரங்களில் செலுத்தும் போது ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் வீதம் கேஸ்பேக் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்