Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைசூர் பாகு விவகாரத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

செப்டம்பர் 17, 2019 07:12

கர்நாடகம்: மைசூர் பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்தியையடுத்து, ஒருங்கிணைந்த கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமானுக்கு மைசூர் பாகு வழங்குவதை போன்ற புகைப்படத்தை ஆனந்த் ரங்கநாதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், மைசூர் பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி இணையம் முழுவதும் வேகமாக பரவியது. 

இந்நிலையில், ஒருங்கிணைந்த கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு மைசூர்பாகை கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம் என எச்சரித்துள்ளார். மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாகை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். காவிரி, மேகதாதுவில் அமைதி காத்தது போல், மைசூர் பாகு விஷயத்தில் இருக்க மாட்டோம் எனவும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்