Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய பொதுத் தேர்வு முறையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 17, 2019 12:58

சென்னை: பொதுத்தேர்வு மூலம் குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 

மேலும் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வருவதற்கான முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என்றும் வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
 

தலைப்புச்செய்திகள்