Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

செப்டம்பர் 17, 2019 04:08

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரி உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 3 மாதங்களாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து நிலுவையில் உள்ள 3மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரியும், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் என  2 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும்  நடத்தினார்கள்.

திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் பனிமனையில் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவையில் உள்ள 3மாத ஊதியம் மற்றும் போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்