Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடுமா?

செப்டம்பர் 18, 2019 04:13

நெல்லை: முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான் உள்ளது. நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். 

இது தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். இங்கு காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை நடத்தியது, தங்களது தொண்டர்களை தயார் படுத்துவதற்குத்தான். அதேபோல் தற்போது தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா?, காங்கிரசா? என்பது தெரியவரும். இது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்