Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்து மருத்துவர்களை தாக்கிய மர்ம நபர்கள்

செப்டம்பர் 18, 2019 02:09

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் மருத்துவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கே நேற்று நள்ளிரவு மதுபோதையில் 5 பேர் கொண்ட கும்பல் காயங்களுடன் வந்துள்ளது. அப்போது மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை கும்பல், தங்களுக்கு முதலில் சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. 

தொடர்ந்து மருத்துவர்களையும் ஊழியர்களையும் தாக்கிய கும்பல் அங்கிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பியுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்