Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரிய கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

செப்டம்பர் 19, 2019 05:15

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு எம்.வி. என்.பி.ஏ. வேர்மீர் என்ற சரக்கு கப்பல் வந்தது. இந்த கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14.16 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து 89 ஆயிரத்து 777 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட 3 நகரும் பளுதூக்கிகள் மூலம் இந்த கப்பலில் இருந்து சரக்குகள் கையாளப்படுகிறது. இதன்மூலம் வ.உ.சி. துறைமுகம் அதிக எடை கொண்ட கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு 85 ஆயிரத்து 224 டன் சுண்ணாம்புக்கல் கையாளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களை கையாளுவதால் தென்தமிழகத்தின் சர்வதேச கடல் வாணிபத்தில் முன்னேறி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்