Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைநகரில் வாகனங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய சாலை

செப்டம்பர் 19, 2019 06:15

புதுடில்லி: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், அனைத்து வாகன ஓட்டிகளின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததைவிட பலமடங்கு அபராதத் தொகையை உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தியும், டெல்லியில் உள்ள வணிகரீதியலான அனைத்து வாகன ஓட்டிகளும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தலைநகர் டெல்லியில், ஆட்டோக்கள், டாக்ஸிக்கள் உள்ளிட்ட தனியார் வாகன சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் உள்ள பல்வேறு சாலைகளும் வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகிறது. வாகன சேவை நிறுத்தத்தால் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்