Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்கள் 135 பேர் கைது

செப்டம்பர் 20, 2019 12:54

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, வங்கி, உள்ளிட்ட பகுதிகளின் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் குவிந்தன.

இந்நிலையில் புறநகர் போலீசார் நேற்று சிறுமுகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, வடவள்ளி, சூலூர், கருமத்தம்பட்டி, கே.ஜி. சாவடி, மதுக்கரை, ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஏராளமான கடைகளில் 1000-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து 50 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று கோவை மாநகரில் பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரேஸ்கோர்ஸ், பீளமேடு உள்ளிட்ட பகுதியில் நடத்திய சோதனையில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்ட 85 பேரை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்