Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய விமானப்படை அத்துமீறல் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பிப்ரவரி 26, 2019 05:07

இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறல்- பாகிஸ்தான் குற்றச்சாட்டு ஆசிப் கபூர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.  

புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், முசாபராபாத் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவர் ஆசிப் கபூர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக புறப்பட்டதால் இந்திய விமானம் திரும்பி சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.  

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்