Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல்: எச். ராஜா

செப்டம்பர் 21, 2019 12:37

சென்னை: தமிழை அழிக்கவே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருவதாக, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்

"நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்தை தவறாக புரிந்துகொண்டதாகவும், தானும் இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

எனினும், அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷாவின் கருத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த திமுக, அமித் ஷாவின் விளக்கத்துக்கு பிறகு தனது அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''திராவிடம் என்ற சொல்லே நம் தமிழ் மொழியை மறக்க, மறைக்க, அழிக்க உபயோகப்படுத்தும் சொல் என்பதை உணர்வோம்'' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்