Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக அக்கறையுள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர்: குவியும் பாராட்டுகள்

செப்டம்பர் 22, 2019 01:01

ஈரோடு: ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகன சிரமத்தை போக்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் மம்பட்டியை எடுத்து களமிறங்கி குழியை மூடினார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பைப் லைன் பதிக்கும் பணி, பாதாள மின் கேபிள் பதிக்க ரோடுகள் தோண்டப்பட்டுள்ளதால் குண்டும் குழியுமாக சாட்சி தருகிறது.

குண்டும் குழியுமான ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது, பறக்கும் புழுதிகளால் கடைகளில் அமர்ந்திருப்போர் பெரும் அவதிப்படுகின்றனர்.

இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே மேட்டூர் ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டாமல் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது.

நேற்று மதியம் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், அங்கு பணியில் இருந்தார். நசியனூர் பகுதியில் இருந்து வாகனங்கள் குழி இருந்த பகுதியில் வர முடியாமல் சிரமப்பட்டன. திடீரென பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தனசேகரன் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தாமாகவே முன் வந்து மம்பட்டியை எடுத்து குழியை மூடினார்.

அந்த வழியாக சென்றவர் இந்த காட்சியை பார்த்து ஆச்சரியமாக பார்த்தனர். குழியை சீரமைக்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நேரடியாக களமிறங்கி குழியை மூடியதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலை தலங்களில் பரப்பிபினர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்