Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்: 28 பெண்கள் புகார்

செப்டம்பர் 22, 2019 01:05

சென்னை : டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்டன.

டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் கண்டுகொள்வதில்லை. டிக் டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக துப்பாட்டாவை தியாகம் செய்து வீடியோ பதிவிட்ட சில குடும்பப் பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பரவ தொடங்கியுள்ளன. 

சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் சமூக விரோதிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.

சில நாட்களில் மட்டும் 28 பேர் டிக்டாக் வீடியோக்களை நீக்கக் கோரி புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்