Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிரிமினல் வழக்கு பிரிவு 102ன் கீழ், அசையா சொத்துகளை காவல்துறை பறிமுதல் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்

செப்டம்பர் 24, 2019 11:27


டெல்லி: கிரிமினல் வழக்குகளில் பிரிவு 102ன் கீழ், முக்கிய கிரிமினல் வழக்குகளில்  அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் பிரிவை பயன்படுத்தி அதிக இடங்களில் காவல்துறையினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மகாராஷ்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த மகாராஷ்ரா உயர்நீதிமன்றம்,இதுபோன்று அதிகமாகபுகார்கள் வந்துகொண்டிருக்கிறது. எனவே, கிரிமினல் வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யும் பச்சத்தில், அவர்களின் அசையா சொத்துகளை தாங்களாக பறிமுதல்  செய்யக்கூடாது என அதிடிர தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்ரா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மகாராஷ்ரா உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுகொண்டுள்ளது. மேலும், கிரிமினல் வழக்குகளில் பிரிவு 102ன் கீழ், முக்கிய கிரிமினல் வழக்குகளில் அசையா சொத்துகளை காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அல்லது வேறு ஏதும் காரணத்திற்காகவோ பறிமுதல் செய்யக்கூடாது. முறையாக நீதமன்ற உத்தரவுக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்