Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போளூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 24, 2019 11:56

திருவண்ணாமலை: போளூர் அடுத்த காங்கேயனூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை, திருவண்ணாமலை  மாவட்ட சுகாதாரம் மையம், திருசூர் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து  தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் காங்கேயனுர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

திருசூர் பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கீதா வரவேற்புரை ஆற்றினார். களம்பர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தர் BMOதிட்ட விளக்க உரை நிகழ்த்தினார்

போளூர் ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.  போளூர் சட்டமன்ற உறுப்பினர்  K. V சேகரன் அவர்கள் முகாமினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். 

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  ஜெயசீலன் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாமில் களம்பூர் கேளூர் சந்தவாசல் வாழியூர் காளசமுத்திரம் மற்றும் திருசூர் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுணர்கள், சமுதாய சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்