Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 100 சிறிய கடைகள் அகற்றம்

செப்டம்பர் 24, 2019 12:41


சென்னை: சென்னை மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள்.

இவர்கள் சுற்றிபார்க்க இருக்கும் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிகளின் சாலையோரம் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பெட்டிக்கடை, கூல்ரிங்ஸ், சங்கு வியாபாரம், பூக்கடை, பழக்கடை, டீ, டிபன், சாப்பாடு, இளநீர் என பலவகை கடைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 21-ந் தேதி மாமல்லபுரம் வந்த தலைமை செயலர் சண்முகம் அந்த கடைகளை அகற்றி சுத்தப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அக்கடைகளை 3 நாட்களுக்குள் அகற்றும்படி கடை நடத்துவோருக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று அனைவரும் கடைகளை அகற்றினர். அடுத்த மாதம் 13-ந் தேதி வரை கடைகள் வைக்ககூடாது எனவும் பேரூராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் 20 நாட்கள் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி தண்டல் கடன் எப்படி கட்டுவது குடும்ப செலவுக்கு என்ன செய்வது என அப்பகுதி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 

தலைப்புச்செய்திகள்