Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி

செப்டம்பர் 24, 2019 12:46

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. வீடுகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடம், பத்திரிகையாளர் மன்றம் ஆகிய பகுதிகளிலும் டெல்லியின் புறநகர் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் வடமேற்கு பகுதியை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இது பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கமே டெல்லியில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்