Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓடிப்போனதாக கூறப்பட்ட டிக்டாக் நர்ஸ் காவல்நிலையத்தில் ஆஜர்!

செப்டம்பர் 25, 2019 04:33

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வினிதா என்பவர் கணவர் ஆரோக்கிய லியாவை கைவிட்டு டிக்டாக் தோழி அபி என்பவருடன் ஓடிப் போனதாகவும் அவர் தன்னுடன் 25 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து வினிதா மீது அவருடைய தாயாரும் கணவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வினிதாவையும் அவரது தோழியை தேடி வந்தனர்

இந்த நிலையில் நேற்று இரவு போலீசில் வினிதா ஆஜரானார். தனது கணவர் தன்னை தாக்கியதால் தான் வீட்டை விட்டு வெளியேறிதாகவும், தான் வெளியேறியதற்கும் தனது தோழி அபிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், அபியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனது கணவரும் தாயாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் காவல் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்

இந்த நிலையில் அபி டிக்டாக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது தன்னை பற்றி தகவல் தவறான தகவல்கள் பரவி கொண்டிருப்பதாக கண்ணீருடன் தெரிவித்த அபி, என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையிலும் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்