Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்காளத்தில் நடந்த லஞ்ச ஊழலில் ஐ.பி.எஸ். அதிகாரி மிர்சா கைது

செப்டம்பர் 27, 2019 04:42

புதுடெல்லி: மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா கட்சி எம்.பி.க்கள், போலீஸ் துணையுடன் லஞ்சம் வாங்குவதாக பேசப்பட்டது. இதை நிரூபிக்க நரதா என்ற செய்தி இணையத்தளம் ஒருவரை அவர்களிடம் அனுப்பி லஞ்சம் கொடுக்க வைத்து ரகசியமாக படம் பிடித்தது.

புர்துவான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய மிர்சா என்ற மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும் இந்த ஊழலில் சிக்கினார். அவரை நேற்று சி.பி.ஐ. கைது செய்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர் மிர்சாதான்.

இதே வழக்கில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் சவுகதா ராய், கசோலி கோஷ், பிரசுன் பானர்ஜி ஆகியோரை சேர்த்து குற்றம் சாட்டுவதற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சி.பி.ஐ. நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்