Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி - சீன அதிபரின் வருகை: மாமல்லபுரத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

செப்டம்பர் 27, 2019 05:02

காஞ்சிபுரம்: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், சிற்பங்கள் நிறைந்த பகுதியில், பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இரு தலைவர்களும் தங்கவுள்ள கோவளம் நட்சத்திர விடுதி மற்றும் மாமல்லபுரத்தின் அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 

பேருந்து நிலையம், வெண்ணெய் திரட்டி பாறை, கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் சிற்பங்களை சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், சாலைகள் அமைத்தல், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுதல், புதிய புல்தரைகள் அமைத்தல், புதிய மின்விளக்குகள் பொருத்துதல், சாலையோர மரங்களுக்கு வேலி அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முன்னேற்பாடுகள் நடைபெறுவதால், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. 

தலைப்புச்செய்திகள்