Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாரூதீன் தேர்வு

செப்டம்பர் 27, 2019 02:22

ஐதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 56 வயதாகும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாரூதீன் தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் இவர் 147 ஓட்டுக்கள் பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டவர் 73 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். இதனையடுத்து அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முகமது அசாரூதீன் 99 டெஸ்ட் மற்றும் 334 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி முறையே ,6,215 ரன் மற்றும் 9,378 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்