Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சினிமா தியேட்டரில் ரவுடிகள் அட்டூழியம்: மேலாளருக்கு அடி உதை

செப்டம்பர் 28, 2019 06:45

சிதம்பரம்: சிதம்பரத்தில் காப்பான் திரைப்படம் பார்க்க மனைவியுடன் சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் ஒருவர், திரையரங்கு மேலாளருடன் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை அழைத்து வந்து மேலாளரை விரட்டி விரட்டி தாக்கி கையை உடைத்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளரான இருப்பவர் மில்லர்.  வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்துவதில் மேலாளருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் வந்ததால் வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிச்சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் மில்லர், படம் முடியும் நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் சிலரை அழைத்து வந்து மேலாளர் மரிஅலெக்சாண்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது

தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் தியேட்டர் மேலாளரை விரட்டி, விரட்டி தாக்கி, அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகும் அடங்காமல் அவரை கையை உடைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது

எதார்த்தமாக அங்கு  வந்த ரோந்து காவலர் ஒருவர் அந்த கூலிப்படையினரிடம் இருந்து மேலாளர் மரி அலெக்சாண்டரை காப்பாற்றினார். போலீசை பார்த்து அங்கிருந்து கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டனர். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மில்லர், சந்தோஷ், நிவாஷ், அரவிந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்