Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் இளைஞர்

செப்டம்பர் 28, 2019 07:51

தஞ்சாவூர்: பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இன்றைய காலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை தத்து கொடுத்த பெற்றோரை, டென்மார்க் இளைஞர் ஒருவர் தேடி அலைவது, நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

அதே போன்று, 40 ஆண்களுக்கு பிறகு கடல் கடந்து, தனது பெற்றோரை தேடி அலைகிறார், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட டென்மார்க் இளைஞர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி - தனலட்சுமி தம்பதி, வறுமை காரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். கடந்த 1979ம், ஆண்டு அவர்களுடைய மகன் சாந்தகுமாரை தத்து கொடுத்துள்ளனர். 

சென்னை பல்லாவரத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டானிஸ் தம்பதிகளிடம் தத்து கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயரில் வளர்ந்தார். தற்போது 40 வயதான டேவிட், பங்குச்சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.  

டென்மார்க் பெற்றோரின் மூலம், தான் தத்து கொடுக்கப்பட்டதை அறிந்த டேவிட், தனது உண்மையான பெற்றோரை பார்க்க வேண்டும், என்ற எண்ணத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல், அவர்களை தேடி வருகிறார். புனேவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும், தனது வழக்கறிஞர் அஞ்சலி பவார் உதவியுடன், டேவிட் நெல்சன் தொடர் முயற்சியில் ஈடுபட்டார். 

அதன் பலனாக பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலம், 40 ஆண்டுகளுக்கு முன்னர், தத்து கொடுத்த சான்றிதழ் மற்றும் குடும்ப புகைப்படம், பெற்றோர்களின் பெயர், மற்றும் தந்தையின் தொழில் போன்றவை பற்றி தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையில், தனது பெற்றோர் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக, அம்மாபேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில், பழைய ஆவணங்களை கொண்டு, தனது பெற்றோரை தீவிரமாக தேடி வருகிறார்.

அப்பகுதியைச் சேர்ந்த முதியவர்களிடம், தனது தாயின் புகைப்படத்தைக் காட்டி, இவர் தேடி வருவது, காண்போரின் நெஞ்சை கலங்க வைக்கிறது. நிச்சயம் தனது பெற்றோரை கண்டுபிடித்து விடுவேன், என நம்பிக்கையுடன் கூறுகிறார், இந்த டென்மார்க் இளைஞர்.

தலைப்புச்செய்திகள்