Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

செப்டம்பர் 28, 2019 01:39

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்விவகாரத்தை உலக நாடுகள் மற்றும் ஐ.நா வரை பாகிஸ்தான் கொண்டு சென்றும், அது முழு வெற்றி பெறாததால், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான சதி பின்னல்களை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் கந்தர்பாலில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து அப்பாவிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்கள் விடுவிக்கபட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன எனவும் கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்