Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். காந்தேரி : கடற்ப்டையில் சேர்ப்பு

செப்டம்பர் 29, 2019 05:04

மும்பை: சமீப காலமாக போர் தளவாடங்களை தயார் செய்யும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ் காந்தேரி’ நீர்மூழ்கி கப்பல் கப்பற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது மூன்று பக்கங்களிலும் கடலால் சூழ்ந்த பகுதி என்பது அனைவரும் அறிந்ததே! எனினும் இந்திய கடற்படைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை அன்னிய நாடுகளிடமே இந்தியா வாங்கி வந்தது. தற்போது அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டுடன் “ஸ்கார்பியன்” வகை நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க அரசு ஒப்பந்தம் போட்டது. அதன்படி இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்புடன் 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் நீர்மூழ்கி கப்பலான ‘ஐ.என்.எஸ் கல்வாரி’யை 2017ல் பிரடஹம்ர் மோடி கடற்படையில் சேர்த்தார். தற்போது இரண்டாவது கப்பல் ‘ஐ.என்.எக்ஸ் காந்தேரி’யை பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கடற்படையில் இணைத்தார்.

கடல் வழியாக இந்தியாவில் நடக்கும் அத்துமீறல்களையும், பயங்கரவாத ஊடுருவல்களையும், கடற்கொள்ளைகளையும் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், அதன் தொடக்கக் கட்டமே இந்த நீர்மூழ்கி கப்பல்கள் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்