Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழை பாதிப்பு : பலியானோரின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு

அக்டோபர் 01, 2019 03:26

புதுடில்லி : பீஹார், உத்தர பிரதேசம் உள்பட, பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை, 134ஆக உயர்ந்துள்ளது.

பீஹார், உத்தர பிரதேசம் உள்பட, பல்வேறு வட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல இடங்கள், நீரில் மூழ்கி உள்ளன. பல்வேறு மாநிலங்களில், மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை, 134 ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள பீஹார், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பலத்த மழையால், தலைநகர், பாட்னாவின் பல பகுதிகள் மிதக்கின்றன. பாட்னாவில் இதுவரை 200 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. கயா மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொரு இடத்தில் வீட்டுச் சுவர் இடிந்து, 3 வயது சிறுமி உயிரிழந்தாள்.கடந்த, சில நாட்களில், மழை மற்றும் வெள்ளத்தில், 93 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள, பாலியா மாவட்ட சிறைக்குள் மழை வெள்ளம் புகுந்தது.உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில், மழைக்கு, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கனமழை பெய்து வருவதால் பாதிப்பு மற்றும் உயிர்பலி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்