Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மோகம்: அமேசானில் 36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு விற்பனை

அக்டோபர் 01, 2019 05:16

மும்பை: வரும் பண்டிகைக் காலத்தை ஒட்டி அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டு ஆன்லைன் விற்பனை தளங்களும் விழாக்கால விற்பனையை அறிவித்து நடத்திவருகின்றன. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை இரண்டும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை நடக்கிறது.

இந்த விற்பனையில் முதல் 36 மணி நேரங்களில் அமேசான் தளத்தில் மட்டும் ரூ.750 கோடிக்கு பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிளிப்கார்ட்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனையை எதிர்பார்ப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்