Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்டோபர் 01, 2019 10:55

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. குடியரசுத் தலைவரும் சிறப்பு  அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் சபாநாயகர் முகமது அக்பர் லோன் உள்பட பல்வேறு அமைப்பினர், அரசியல்கட்சி தலைவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்கள், நேற்று  மீண்டும் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டியுள்ளதால், ஜம்மு - காஷ்மீர் தொடர்பான மனுக்களை விசாரிக்க முடியவில்லை. 

ஜம்மு -  காஷ்மீர் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள், என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழக்குகளை இன்று விசாரித்தது. அப்போது, வழக்குகள் தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.  

தலைப்புச்செய்திகள்