Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேருந்து நடத்துநரை தாக்கிய காவலர்கள் நேரில் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

அக்டோபர் 02, 2019 05:53

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் நடத்துநரை காவலர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட காவலர்களை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது பயண சீட்டு எடுக்கும்படி நடத்துநர் ரமேஷ் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துனர் தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைராலானது. 

இதுதொடர்பாக வெளியான செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதன்படி, இவ்வழக்கில் நடத்துநரை தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவரும் வரும் 29ம் தேதி தூத்துக்குடி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்