Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்: ஒரே நாளில் 4 பேர் கைது

அக்டோபர் 02, 2019 01:32

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பெரியபாளையம், மீஞ்சூர், மற்றும் வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்து வருவதாக வந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் ஆரம்பத்தை சேர்ந்த ராஜேந்திரன், நீலகண்டன் இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமலே போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்ததையடுத்து இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோன்று பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவரையும், மீஞ்சூரை சேர்ந்த ஜீவடார்க் ராமாராவ் என்பவரையும் கைது செய்தனர். 

இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தப்பியோடிய வெங்கல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.  

தலைப்புச்செய்திகள்