Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது: தங்க தமிழ்செல்வன்

பிப்ரவரி 26, 2019 08:28

கூத்தாநல்லூர்: ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். அமமுக சார்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில்நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் 2 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். அவர்களிடம் பிடித்த பணத்தை திரும்ப தரவேண்டும் என்றும் போராடினார்கள். ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி இல்லை என்று கூறினார். ஆனால் ஒருபுறம் பொங்கல் பரிசுக்காக ரூ 2500 கோடியை ஒதுக்கினார். 

1952-ல் இருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளோடு, மாநில கட்சிகள் கூட்டு சேர்ந்ததால் தான், மாநில உரிமைகளை இழக்க நேருகிறது. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது, தடுக்க முடிவதில்லை. அதனால்தான் அ.ம.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி கிடையாது என்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெற்று 'அரசியல் அதிசயம்' என்கிற சாதனையை நிகழ்த்தி காட்ட போகிறோம் என அவர் பேசினார்.  
 

தலைப்புச்செய்திகள்