Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து எதி்ரொலி: 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

அக்டோபர் 05, 2019 04:29

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர முடியாமல் முடங்கியுள்ளர். ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்கான வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அங்கு சுற்றுலா சென்று இருந்த பயணிகள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர்.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிக்கு செல்லவில்லை. மேலும் 40 ஆயிரத்தி்ற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களும் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள கன்மோ தொழிற்பேட்டையில் கடந்த 2 மாதங்களாக மூடிய நிலையில் உள்ளது. இதைப்போல மாநிலத்தில் பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர். 

தலைப்புச்செய்திகள்