Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்ரோ விஞ்ஞானி கொலை வழக்கு: கைதானவரின் பரபரப்பு வாக்குமூலம்

அக்டோபர் 05, 2019 04:52

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இஸ்ரோவின் துணை அமைப்பான நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சியில் பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் கடந்த 20- வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறார். 56 வயதாகும் இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருக்கிறார்.

வங்கி ஊழியரான இவர், சென்னையில் இருக்கிறார். சுரேஷ் மட்டும் ஹைதராபாத்தில் தனியாக பிளாட் ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று சுரேஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், விஜயா பரிசோதனை நிலையத்தில் வேலை செய்துவரும் ஸ்ரீநிவாஸ் என்பவர் சுரேஷின் இல்லத்திற்கு ரத்த மாதிரிகளை பெறுவதற்காக அடிக்கடி வந்து போவது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தங்களது விசாரணையை தொடங்கிய போலீசார், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்தனர். சுரேஷிற்கும், ஸ்ரீ-நிவாஸ்க்கும் இடையே ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. தனியாக சுரேஷ் இருப்பதால், தனக்கு அதிக பணம் கிடைக்கும் என்று ஸ்ரீ-நிவாஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுரேஷ் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சுரேஷ், ஸ்ரீ-நிவாசால் குத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்