Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த ஆண்டு முதல் அனைத்து மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கும் ஒரே மாதிரியான நீட் தேர்வு

அக்டோபர் 05, 2019 08:32

புதுடெல்லி: எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுவரை, பிற மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வும், எய்ம்ஸ், ஜிப்மரில் சேருவதற்கு தனித்தனி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையை மாற்றி, அனைத்து மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்து அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. 

மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ள சுகாதாரத்துறை, ஆணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இதற்கான அறிவிப்பாணையை, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டிருந்த நிலையில், இம்மாதம் 18-ம் தேதிக்குள் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், உறுப்பினர், உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தலைப்புச்செய்திகள்