Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூமிகாவேதான் எனக்கு வேணும்: கமிஷனர் ஆபீசில் தஞ்சம் புகுந்த அருண் குமார்

அக்டோபர் 05, 2019 08:33

திருநெல்வேலி: பூமிகாதான் எனக்கு வேணும்.. அவதான் என் உயிர்.. எங்களை பிரிச்சிடாதீங்க என்று திருநங்கையை காதலித்து மணந்த இளைஞர் சேலம் கமிஷனர் ஆபீசில் தஞ்சம் அடைந்தார்!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா. 27 வயதாகிறது. திருநங்கையான இவர், பிடெக்., படித்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்யும்போது, எலக்ட்ரீஷியன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. 3 வருட காதலுக்கு பின், 5 மாசத்துக்கு முன்பு நெல்லையில் ஒரு கோயிலில் வைத்து பூமிகாவுக்கு தாலி கட்டினார் அருண்குமார். 

விஷயம் வீட்டுக்கு தெரிந்தும் அதை பற்றியும் கவலைப்படாத அருண்குமார், நெல்லையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து பூமிகாவுடன் குடிபோனார். ஆனாலும், அருண்குமாரின் பெற்றோரும், சொந்தக்காரர்களும், பூமிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தனர்.

இதனால், நெல்லையை விட்டு காலி செய்து, சேலத்தை அடுத்துள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் வந்து ஒரு வீடு எடுத்து தங்கினர். இதையடுத்து, சேலத்துக்கும் அருண்குமாரின் பெற்றோர் வந்துவிட்டனர். "என் பையனை விட்டுட்டு ஓடிப்போய்டு.. இல்லேன்னா கொன்றே புதைச்சிடுவோம்" என்று மீண்டும் மிரட்டல் விடுத்தனர்.

இப்படி ஒவ்வொரு ஊராக போனாலும் பின்னாடியே விரட்டி கொண்டு மிரட்டல் விடுத்ததால், அருண்குமார் சேலம் கமிஷனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து மனு தந்தார். "பூமிகா இல்லாமல் வாழ முடியாது.. அவள்தான் என் மனைவி, என் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள்" என்று முறையிட்டார்.

இந்த மனு குறித்து விசாரிக்கும்படி சேலம் நகர மாநகர மகளிர் போலீசுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, மகளிர் போலீசும் அருண்குமாரின் பெற்றோரிடம் போனில் பேசி எச்சரிக்கை செய்தனர். திரும்பவும் அவர்கள் 2 பேரையும் பிரிக்க நினைத்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று சொன்ன பிறகே இளம்தம்பதியினர் நிம்மதி ஆயினர்.

தலைப்புச்செய்திகள்