Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தமவில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே: கமல்ஹாசனை கண்டித்து அதிமுக நாளேட்டில் கட்டுரை

அக்டோபர் 05, 2019 10:55

சென்னை: அதிமுகவினரை வியாபாரிகள் என்று விமர்சித்த நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனுக்கு அதிமுக நாளேடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தமவில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே என்ற தலைப்பில் அதிமுக நாளேட்டில் கமல்ஹாசனை கண்டித்து கட்டுரை வெளியாகியுள்ளது. 

அதில், ஏறத்தாழ முடிவுக்கே வந்துவிட்ட திரையுலக வாழ்வை அரசியல் மூலம் நீட்டிக்கும் எண்ணத்துடனேயே கமல் பொதுவாழ்வுக்கு வந்திருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கட்சி நடத்த மக்களிடம் கமல் காசு கேட்பதாகவும், ஆனால் அரசியலில் தொடரும் அவரது நடிப்பை பார்க்க காசு கொடுக்க முடியாது என அவரது ரசிகர்களே மறுத்துவிட்டதாகவும் அதிமுக ஏடு கூறியுள்ளது. 

மக்களுக்கு சேவை செய்யும் அரசியலை பிழைப்புக்கான ஆதாய சூதாட்டமாக்க கமல் முயற்சிப்பதாகவும், ஒட்டுமொத்த கலாச்சார சீரழிவின் குப்பைக் கூளமாக அந்நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்துகிற கமல்ஹாசன் தமிழக அரசியலையும் குறிப்பாக கரை வேட்டி கட்டுகிற அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதன் மூலம் தன்னை உத்தமனாக சித்தரிக்க முயற்சிக்கிறார். 

கூடவே தன்னை நோக்கி விளம்பர வெளிச்சத்தை திசை திருப்ப அத்துமீறிய சொற்களால் அர்ச்சிக்கிறார் என்றும், கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை உத்தமவில்லனாக கமல் காட்டிக்கொண்டாலும், இப்போதைய அவரது போக்கு, புலம்பல் மொத்தமும் வில்லனாகவே காட்சியளிப்பது வெக்கக்கேடானது என்றும் அதிமுக நாளேடு விமர்சித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்