Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி அறிவித்ததற்கு புகழேந்தி கண்டனம்

அக்டோபர் 06, 2019 02:02

சென்னை: அமமுக நிர்வாகி புகழேந்தி உடனடியாக தினகரனை எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை புகழேந்தி நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கோவை மண்டல அமமுக கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

டிடிவி தினகரனை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். அமமுக கட்சியை டிடிவி தினகரன் நாசம் செய்துவிட்டார்; கட்சியை நாசம் செய்த டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட முடியாது என புகழேந்தி கூறினார். எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்தவர்களின் எதிர்காலம் தினகரனால் கேள்விக்குறியானது. 

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோக காரணமானவர் டிடிவி. தொடர் தோல்விக்கு டிடிவி தினகரன் பொறுப்பேற்க வேண்டும். தினகரனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்துள்ள புகழேந்தி இடைத்தேர்தலை அமமுக புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுய ஆதாயத்திற்காக உள்ளாட்சி தேர்தலையும் தினகரன் புறக்கணித்து விடுவார் என்று கூறியுள்ள அவர் விரைவில் கட்சியை கலைத்தாலும் ஆச்சரியப்படுவதில் ஒன்றும் இல்லை எனவும் கூறினார். 

தலைப்புச்செய்திகள்