Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவியையும் கொன்று முதியவர் தற்கொலை

அக்டோபர் 07, 2019 04:14

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சாங்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (72). இவரது மனைவி கருப்பாயி (65). மகன், மகளுக்கு திருமணமாகி விட்டதால் முனியாண்டி மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். முதுமையால் சரிவர வேலைக்கு சென்றுவர முடியாததால் பணம் மற்றும் மன கஷ்டத்தில் தம்பதி இருந்துள்ளனர். இதைடுத்து முனியாண்டி, நேற்று அதிகாலை கடப்பாரையால் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, தாராசுரம் ரயில்வே கேட் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலையும் செய்து கொண்டார். தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்