Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் சமாதியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம்: ஓ.பன்னீர்செல்வம்

பிப்ரவரி 26, 2019 10:52

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வென்று ஜெயலலிதாவின் சமாதியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரம்பூரில் மாவட்ட செயலாளர் ‌ ஆர். எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்தது பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:- 

ஒரு மாநிலத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான். 17 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்தவர் அம்மா அம்மாவின் ஆசியால் நல்லாட்சி அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. 

18 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கட்சியை 1½ கோடி தொண்டர்களாக மாற்றியவர் ஜெயலலிதா. பலர் செய்த சதிகளை எல்லாம் சந்தித்து துணிவுடன் வெற்றி கண்டார். 

சாதாரண தொண்டனான நாங்களெல்லாம் இந்த பதவிக்கு வந்துள்ளோம் இது தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. அம்மாவின் எண்ணப்படி நூறு ஆண்டுகள் என்ன ஆயிரம் ஆண்டுகளும் இந்த ஆட்சியையும் கட்சியையும் நடத்துவோம். அம்மாவின் நம்பிக்கை நாங்கள் காப்பாற்றுவோம். 

நாம் அமைத்திருப்பது மெகா கூட்டணி இந்தியாவிலேயே மகத்தான இந்தக் கூட்டணி நம்முடன் இப்போது பா.ம.க. இணைந்துள்ளது இந்த கூட்டணி கண்டிப்பாக ஒரு வெற்றி கூட்டணியாக மாறும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் கூட்டணி கட்சி நிற்கும் தொகுதிகளிலும் அ.தி.மு.க. நிற்பதுபோல் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை அம்மாவின் சமாதியில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார். 
முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் 23 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கூட்டத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன், ஜெயபிரகாசம், பாஸ்கர், ஜனார்த்தனன், கிருஷ்ணவேணி, கணேசன், மாரிமுத்து, மாரியம்மாள், இளங்கோவன், சூசை, சுந்தரலிங்கம், வெற்றி வேந்தன், அஞ்சுலட்சுமி, புகழேந்தி, மூர்த்தி, பாலமுருகன், தேவா, இளங்கோவன், அகஸ்டின், வினோத்குமார், கார்த்திக், புருஷோத்தமன், ரமேஷ், நவீன், சத்தியமூர்த்தி, தினேஷ்குமார், வாஞ்சிநாதன், தமிழரசன், தனசேகர், ராஜேஷ், பாலாஜி, ராஜவேலு, சுரேஷ், கணேசன், பார்த்திபன், புவனேஸ்வரி, செல்வராணி, தனபாலன், வீரமருதுபாண்டியன், ராஜி, ராமதிலகம், செந்தில், மனோகரன், ரத்தினவேல், வினோத், தாமோதரன், வேலு, ‌ஷகிலா, கண்ணா, செல்வி, முருகன், அலெக்ஸ், நரசிம்மன், மூர்த்தி, வாசுகி, எம்.எம்.கோபி, டைகர் தயாநிதி, சுஜாதா, மதன கோபால், லாலுபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்