Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்ப்பு: வரும் 10 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

அக்டோபர் 08, 2019 04:37

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் 10 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

தற்போது காஷ்மீரில் நிலைமை சீரானதை அடுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில இடங்களில் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பியது. மேலும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்; காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் 10 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்