Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீன எல்லை பகுதியில் பீரங்கிகளை நிறுத்த ராணுவம் திட்டம்

அக்டோபர் 08, 2019 04:42

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், சீன எல்லைப் பகுதியில், அதிநவீன, எம் - 777 பீரங்களை நிறுத்தி வைக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளது. வரும், டிசம்பரில் இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால், அதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் செல்லும்போதெல்லாம், அதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில், ஹிம் விஜய் என்ற பெயரில், மலைப் பகுதி போர் ஒத்திகையில், நமது ராணுவம் விரைவில் ஈடுபட உள்ளது. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. 

சீன அதிபர், ஜி ஜின்பிங், விரைவில் இந்தியா வர உள்ளார். இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், அமெரிக்க தயாரிப்பான எம் - 777 பீரங்கிகளை நிறுத்தி வைக்க, ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம், 145 பீரங்கிகள் வாங்க, அமெரிக்காவுடன், 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 5,070 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 25 பீரங்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள, 120 பீரங்கிகள், நமது நாட்டில் இணைக்கப்பட உள்ளன.

இந்த பீரங்கிகள், விரைவில் நமது ராணுவத்துக்கு கிடைக்க உள்ளது. அதில், தலா, 18 பீரங்கிகள் கொண்ட, ஏழு ரெஜிமென்ட் என, மொத்தம், 126 பீரங்கிகளை, சீன எல்லையில், அருணாச்சலப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்