Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிஎம்சி வங்கி முறைகேடு: மேலும் ஒரு விமானம், அதிவேக படகு உள்ளிட்டவை பறிமுதல்

அக்டோபர் 08, 2019 02:10

மும்பை: பிஎம்சி வங்கி முறைகேட்டில் சிக்கி சிறைவாசம் அனுபவிக்கும் HDIL கட்டுமான நிறுவன தலைவர் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான மேலும் ஒரு விமானம், அதிவேகப் படகு, 3 சொகுசு கார்கள், மூன்று  பைக்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியான, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

பிஎம்சி வங்கி முறைகேட்டில் ஆதாயம் அடைந்ததாக கூறப்படும் ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சரங் வதாவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ராகேசுக்குச் சொந்தமான பாம்பார்டியர் சேலஞ்சர்- 300 ரக விமானம் மற்றும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், மற்றுமொரு விமானத்தை இன்று அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மும்பை ராய்கட் மாவட்டத்தில் இருக்கும், கடற்கரையோரம் அமைந்துள்ள அலிபாக் என்கிற ஊரில் சுமார் இரண்டரை ஏக்கர் நில பரப்பில், 22 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கிருந்து, அதிவேகப் படகு, ஆடி உள்ளிட்ட 3 சொகுசு கார்கள், 3 நவீன பேட்டரி கார்கள், உயர்தரமான 3 பைக்குள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 

தலைப்புச்செய்திகள்