Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைரலாகும் Rs 19,000 ஹாஷ்டேக்: இதுதான் காரணமா?

அக்டோபர் 09, 2019 05:41

சென்னை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவுவதாக கூறப்பட்டது.

இந்த மந்த நிலை காரணமாக, உள்ளாடை கூட வாங்க முடியாத சூழல் இருந்து வருகிறது என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என்ற நிறுவனங்கள் சலுகையில் பொருட்களை விற்பனை செய்து வந்தது.

6 நாட்களுக்கு மட்டும் இந்த பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த 6 நாளில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகளை ஆதாரமாக வைத்து, இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இல்லை. இது எதிர்கட்சிகள் பரப்பிய வதந்தி என்று 19 ஆயிரம் என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்