Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி இன்ஸ்பெக்டர் கைது

பிப்ரவரி 27, 2019 05:22

வசாய்: ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் கைது செய்யப்பட்டனர்.பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் ஒருவர் லாட்டரி தொழிலை தொடங்க விரும்பினார். இதற்கு அனுமதி அளிக்ககோரி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார்.  

அப்போது இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமேஷ் காவய் (வயது47), போலீஸ்காரர் பாலு குதே (33) ஆகியோர் ரூ.30 ஆயிரம் அவரிடம் லஞ்சம் கேட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து பால்கர் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த யோசனையின்படி, புகார் அளித்தவர் போலீஸ்காரர்களை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட உதவி இன்ஸ்பெக்ட உமேஷ் காவய், போலீஸ்காரர் பாலு குதே ஆகியோரை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்