Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் துணை முதல்வர் வீட்டில் ரூ.4.25 கோடி பறிமுதல்

அக்டோபர் 11, 2019 12:00

பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்., மூத்த நிர்வாகியுமான ஜி.பரமேஸ்வரா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று(அக்.,10) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

மருத்துவ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரில், பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில், பரமேஸ்வராவின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடந்தது. 

ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு மருத்துவ கல்லூரிகளில் இடம்வாங்கி கொடுத்ததாக பரமேஸ்வரா மீது புகார் கூறப்பட்டது. 300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.4.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்