Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்ணுக்கு அடியில் நகைகள்: போலீசார் திகைப்பு

அக்டோபர் 12, 2019 03:19

பெரம்பலூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையில்  ஈடுபட்ட முருகனால் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட 4 கிலோ தங்கநகைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கர்நாடக போலீஸ் பிடியில் இருந்த முருகனை மடக்கிப் பிடித்தது தமிழக போலீஸ்.. அதிதீவிர விசாரணையை கையில் எடுத்து வருகிறது!

இந்நிலையில், கொள்ளை தொடர்பாக பெங்களூர் போலீசார் சரணடைந்த முருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது கொள்ளையடித்ததில் 4 கிலோ தங்கத்தை திருவெறும்பூர் பகுதியில் வேப்பந்தட்டை என்ற இடத்தில் மண்ணுக்குள் புதைத்து வைப்பதாக சொல்லவும், கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தனர். 

அங்கு புதைத்து வைத்திருந்த 4 கிலோ தங்கத்துடன், முருகனை திரும்பவும் பெங்களூருக்கே அழைத்து சென்றனர். ஆனால் தகவலறிந்த நம் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.

இதையடுத்து, பெங்களூரு போலீஸ் பிடியில் இருந்து முருகனை தமிழக போலீசார் திரும்பவும் பெரம்பலூருக்கு பெங்களூர் போலீசாருடனேயே அழைத்து வந்தனர். பெரம்பலூரில் எஸ்பி தலைமையிலான குழு முருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பெங்களூரில் நடந்த கொள்ளை தொடர்பாக, தங்களையும் வைத்து கொண்டு முருகனிடம் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று பெங்களூர் போலீசார் கேட்டுக் கொள்ளவும், அதன்படியே விறுவிறு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இப்பதான் மண்ணுக்குள் நகையை புதைத்த விஷயமே வெளிவந்துள்ளது. 

இவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தான் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், மீட்கப்பட்ட இந்த நகைகளை பெங்களூர் எடுத்து செல்வதா, தமிழகத்திலேயே வைப்பதா என்ற பேச்சு நடந்து வருகிறது. 

தலைப்புச்செய்திகள்