Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2,500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

அக்டோபர் 13, 2019 11:40

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 2 ஆயிரத்து 500 பெண்களுக்கு 9 கோடியே 64 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தை வழங்கினார்.

அதன் பின்னர் விழாவில் பேசிய அவர், பெண் கல்வியை ஊக்குவித்து அவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

கல்வியில் பெண்கள் மென்மேலும் சிறந்து வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்