Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து

அக்டோபர் 14, 2019 06:36

தேனி: தேனி அருகே தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், கிடங்கு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி விளக்கில் ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் நிறுவனத்தில் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 9 மணியளவில் அந்த நிறுவன வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தீ விபத்து குறித்து நிர்வாகத்தினர் மூலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி ஆகிய பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனிடையே தீயணைப்பு வாகனங்களில் குறிப்பிட்ட இடைவேளையில் தண்ணீர் நிரப்புவதற்காக அல்லி நகரம் நகராட்சியிலிருந்து 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மின்கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் காவல் துறையினர், மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்