Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளில்லா விமானத் தடுப்பு: எல்லை நெடுகிலும் நிறுவ மத்திய அரசு முடிவு

அக்டோபர் 14, 2019 02:19

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வினியோகிப்பதை தடுக்க, ஆளில்லா குட்டி விமானங்களை ஒடுக்கும் நவீன அமைப்பை எல்லை நெடுகிலும் நிறுவ உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வினியோகம் செய்ததை இந்திய எல்லை பாதுகாப்பு படை கண்டறிந்துள்ளது.

இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி அன்று எல்லை பாதுகாப்பு படையின் உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஆளில்லா குட்டி விமானங்களை ஒடுக்கும் தொழில் நுட்பத்தை கையாளுமாறு எல்லை பாதுகாப்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டார். ஆளில்லா குட்டி விமானங்களை கண்காணிக்க எல்லை நெடுகிலும் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கவும், 1000 அடி அல்லது அதற்கு கீழாக பறந்து வரும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தவும் அவர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து ஆளில்லா குட்டி விமானங்களை தடுக்கும் கருவிகளை வாங்க தீர்மானித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை கூறியுள்ளது. ஜி.பி.எஸ். அமைப்பை முடக்கும் திறனும், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வல்லமை கொண்ட கருவியை வாங்க உள்ளதாகவும், இதனை எல்லை நெடுகிலும் அமைக்க உள்ளதாகவும் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்